பக்கம் எண் :

 9. திருவேணுபுரம்337


பக்கம்பல மயிலாடிட

மேகம்முழ வதிர

மிக்கம்மது வண்டார்பொழில்

வேணுபுர மதுவே. 4

91. நானாவித வுருவானமை

யாள்வானணு காதார்

வானார்திரி புரமூன்றெரி

யுண்ணச்சிலை தொட்டான்

தேனார்ந்தெழு கதலிக்கனி

யுண்பான்றிகழ் மந்தி

மேனோக்கிநின் றிரங்கும்பொழில்

வேணுபுர மதுவே. 5

__________________________________________________

போது அவனுக்கு மிகுதியான வரங்கள் பலவற்றை அளித்தருளிய வானோர் தலைவனாகிய சிவபெருமானது ஊர், மேகங்கள் முழவாக ஒலிக்க, நாற்புறமும் மயில்கள் ஆடுவதும், மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமான பொழில்கள் சூழ்ந்த வேணுபுரமாகும்.

கு-ரை: தக்கன் தன் சிரம் - தக்கன்தலை. தன அகரம் வேண்டா வழிச் சாரியை. அரிவித்து என்றது வீரபத்திரக் கடவுளைக் கொண்டு வெட்டுவித்த வரலாற்றினை உட்கொண்டு.

5. பொ-ரை: அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில் நினைக்கின்றோமோ அவ்வுருவில்தோன்றி நம்மை ஆட்கொள்பவனும், தன்னை நணுகாதவராகிய அசுரர்களின் வானில் திரிந்த மூன்றுபுரங்கள் வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்து எரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர், மரங்களில் அமர்ந்த மந்திகள் தேனின் சுவை பொருந்தியனவாய்ப் பழுத்துத் தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல் நோக்கியவாறே தாம் ஏறிப்பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும். "வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ".

கு-ரை: நானாவிதஉருவால் நமையாள்வான் - தியானிக்கின்ற அடியார்கள் நினைத்த உருவத்தோடு வெளிப்பட்டு அருள்புரிபவன்.