92. மண்ணோர்களும்
விண்ணோர்களும்
வெருவிம்மிக
வஞ்சக்
கண்ணார்சல
மூடிக்கட
லோங்கவ்வுயர்ந்
தானூர்
தண்ணார்நறுங்
கமலம்மலர்
சாயவ்விள வாளை
விண்ணார்குதி
கொள்ளும்வியன்
வேணுபுர மதுவே. 6
* * * * * * 7
__________________________________________________
நணுகாதார் -
பகைவர்களாகிய திரிபுராதிகள். வானார் -
வானத்திற் பறந்து திரிகின்ற. சிலை தொட்டான் -
வில்லால் அம்பைச் செலுத்தியவன். தொடுதல் -
செலுத்துதல். ‘கடுங் கணைகள் தம்மைத் தொட்டனன்‘
(கந்த. சூரபன்மன் வதை.191) சிலை தொட்டான் என்றது
சிலையைத் தொட்ட அளவே! திரிபுரங்கள் எரிந்தன
என்னும் நயப்பொருள் தோன்ற.
தேன் ஆர்ந்து எழு
கதலி - தேன்கதலி என்னும் ஒருவகை வாழை. மந்தி
மேல்நோக்கி ஏறிப்பறிக்க இயலாத நிலைக்கு
இரங்குகின்ற (வருந்துகின்ற) இயற்கையை
அறிவித்தபடி. இறங்கும் என்றும் பாடம். இதற்கு,
குரங்கு மேல்நோக்கியவாறே கீழிறங்கும் என்பது
பொருள்.
6. பொ-ரை: மண்ணுலக
மக்களும் விண்ணகத்தேவரும் கண்டு நடுங்கி மிகவும்
அஞ்சுமாறு நிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல்
ஊழி வெள்ளமாய் ஓங்க, அவ்வெள்ளத்திலும் அழியாது
உயர்ந்து தோணியாய்த் தோன்றுமாறு செய்த
சிவபிரானது ஊர், தண்ணிய மணம் கமழும் தாமரை
மலர்கள் சாயுமாறு இளவாளை மீன்கள் வானிடை எழுந்து
குதிக்கும் நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.
கு-ரை: கண்ணார் சல மூடி
- நிலமெல்லாம் நிறைந்து நீர் மூடி. மூடி ஓங்க
உயர்ந்தான் ஊர் எனக் கூட்டுக.
7. * * * * * * *
|