பக்கம் எண் :

 9. திருவேணுபுரம்339


93. மலையான்மக ளஞ்சவ்வரை

யெடுத்தவ்வலி யரக்கன்

தலைதோளவை நெரியச்சர

ணுகிர்வைத்தவன் றன்னூர்

கலையாறொடு சுருதித்தொகை

கற்றோர்மிகு கூட்டம்

விலையாயின சொற்றேர்தரு

வேணுபுர மதுவே. 8

94. வயமுண்டவ மாலும்மடி

காணாதல மாக்கும்

பயனாகிய பிரமன்படு

தலையேந்திய பரனூர்

கயமேவிய சங்கந்தரு

கழிவிட்டுயர் செந்நெல்

வியன்மேவிவந் துறங்கும் பொழில்

வேணுபுர மதுவே. 9

__________________________________________________

8. பொ-ரை: மலையரையன் மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியவை நெரியுமாறு கால்விரலை ஊன்றிய சிவபிரானது ஊர், ஆறு அங்கங்களோடு வேதங்களின் தொகுதியைக் கற்றுணர்ந்தோர் தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடைய சொற்களைத் தேர்ந்து பேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.

கு-ரை: இராவணனது தலையும் தோளும் நெரிய விரலினது நுனியை ஊன்றி மறக்கருணை காட்டியது வரையை யெடுத்ததற்காக அன்று; உமாதேவிக்கு அச்சம் விளைத்தமையான். பெண்மையின் பொதுமை நோக்கி உரைத்தலாயிற்று. உகிர் - நகம். சுருதித்தொகை - சாகைகளின் கூட்டமாகிய வேதம். விலையாயின சொல் - பெறுமதியுடைய சொற்கள்.

9. பொ-ரை : உலகை உண்ட திருமாலும் தன் அடிகளைக் காணாது அலமருமாறு செய்தவனும், மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடைய பிரமனது கிள்ளப்பட்ட