திரு அறையணிநல்லூரை
வழிபட்ட பிள்ளையாருக்கு, அன்பர்கள்
அண்ணாமலையைக் காட்டினார்கள். அண்ணாமலை,
இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது. அதனைக்
கண்ணாற்பருகிக் கைதொழுது கலந்து
போற்றுங்காதலினால் இப்பதிகத்தை
அருளிக்கொண்டே தலத்தையடைகின்றார்கள்.
இப்பதிகமும் சேய்மையில் அண்ணாமலையை அன்பர்
காட்டக் கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார்
தெரிவிக்கின்றார். (பெரிய. திருஞா. 969, 970.)
பண்: நட்டபாடை
பதிக எண்: 10
திருச்சிற்றம்பலம்
97. உண்ணாமுலை
யுமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய
பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன
வருவித்திரண்
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை
தொழுவார்வினை
வழுவாவண்ண மறுமே. 1
__________________________________________________
இப்பதிகப்
பாடல்கள் உள்ளவாறே பொருள் கொள்ள அமைந்தவை.
1. பொ-ரை: உண்ணாமுலை
என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக
எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும்
பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும்
அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி
வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை
ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை
யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
கு-ரை: உமையாளொடும்
உடனாகிய ஒருவன் என்றது