96. வேதத்தொலி
யானும்மிகு
வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின்
மனம்வைத்தெழு
பந்தன்றன பாடல்
ஏதத்தினை
யில்லாவிவை
பத்தும்மிசை
வல்லார்
கேதத்தினை
யில்லார்சிவ
கெதியைப்பெறு
வாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை:
ஞானசம்பந்தரின் ஏதம் இல்லாத இப்பத்துப்
பாடல்களையும் இசையோடு பாடுவார் சிவகதி பெறுவார்
என வினை முடிபு கொள்க.
மங்கல ஒலிகள்
பலவற்றோடு வேத ஒலியாலும் மிக்குத் தோன்றும்
வேணுபுரத்துப் பெருமானின் பாதங்களை மனத்துட்
கொண்டு பாடப்பெற்ற ஞானசம்பந்தரின்
துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை
இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில்
சிவகதியைப் பெறுவர்.
கு-ரை: சென்ற
திருப்பாடல்களில் கூறிய முழவதிர்தலும், வாளை
குதிகொள்ளுதலும், கற்றோர்கள் சொல்தேர்தலும்
ஆகிய இவற்றால் உண்டான ஒலியோடு வேத ஒலியாலும்
மிகுந்திருக்கின்ற வேணுபுரம். பாதம் - சிவனது
திருவடி. பந்தன் - ஞானசம்பந்தன். ஏதத்தினை இல்லா
இவை பத்தும் - துன்பம் தரல் இல்லாத இந்தப்
பத்துப்பாடல்களும் துன்பம் நீக்குமாற்றை ஊன்றி
நோக்கி இன்புறுதற்குரியது. கேதம் - துன்பம்.
பரமத திமிரபாநு
பூம்பாவாய் போதியோ என்றழைத்த பூசுரன்றாள்
நாம்பாவா லேத்திநயப் பாம். - மறைஞான
சம்பந்தர்.
|