ஆலிம்மழை
தவழும்பொழி
லண்ணாமலை யண்ணல்
காலன்வலி
தொலைசேவடி
தொழுவாரன புகழே. 3
100. உதிரும்மயி
ரிடுவெண்டலை
கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி
யுணலாகவு
மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை
யிளவெண்பிறை
முடிமேல்கொள
வடிமேல்
அதிருங்கழ
லடிகட்கிடம்
அண்ணாமலை யதுவே. 4
__________________________________________________
கொண்டு உதிர்க்கும்
முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப்
பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள்
தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை,
இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த
திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ். (தொழுவார்
புகழ் பெறுவர் என்பதாம்)
கு-ரை: பீலிம்மயில்,
ஆலிம்மழை, சூலிம்மணி என்பன விரித்தல் விகாரம்.
சூலி மணி - சூலிருந்து பெற்ற முத்துக்கள். ஆலி -
நீர்த்துளி. திருவடியால் எட்டியுதைத்தார் ஆகலின்
காலன் வலிதொலை சேவடி என்றார். புகழ் தொழுவார்
எனக்கூட்டுக.
4. பொ-ரை:
உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய
பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக்
கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை
உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு
முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்
திருவடிகளில் அதிரும் வீரக் கழல்களோடு விளங்கும்
சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.
கு-ரை: உதிரும் மயிர்
இடு வெண்டலை - சதை வற்றிப் போனதால்
உதிர்கின்ற மயிரையுடைய காட்டில் இடப்பெற்ற
பிரம கபாலம். எதிரும் பலி - வந்து இடப்பெறும்
பிச்சை. பிச்சை ஏற்பார் யாசியாது
தெருவிற்செல்ல மகளிர் தாமே வந்து இடுதல்
மரபாதலின்
|