101. மரவஞ்சிலை
தரளம்மிகு
மணியுந்துவெள்
ளருவி
அரவஞ்செய
முரவம்படும்
அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை
யுலவும்புன
லுடனாவது மோரார்
குரவங்கமழ்
நறுமென்குழல்
உமைபுல்குதல்
குணமே. 5
102. பெருகும்புன
லண்ணாமலை
பிறைசேர்கடல்
நஞ்சைப்
பருகுந்தனை
துணிவார்பொடி
யணிவாரது பருகிக்
__________________________________________________
அதனை விளக்க
எதிரும்பலி என்றார். முதிருஞ்சடை இள வெண்பிறை:
முரண்.
5. பொ-ரை: வெண்
கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள்
ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள்
பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில்
விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில்
பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல்,
குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய
உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?
கு-ரை: சிலை - ஒருவகை
மரம். தரளம் - முத்து. மணி - இரத்தினம். அரவம் -
ஒலி, உரவம் - உரகம் என்பதன் திரிபு; பாம்பு.
உரகமும், கங்கையும் சடையில் உலாவுதலையும் ஓராமல்
உமையாளைத் தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார்.
புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய்,
நாணங்காப்பாகவும். இவர் பாம்பும், கங்கையும்
சடைமீது உலாவப் புல்லல் நன்றன்று என்று நகைபடச்
சொல்லிற்றாம்.
6. பொ-ரை:
பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில்
பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய
நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும்,
அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும்,
திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும்
சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை
|