கருகும்மிட
றுடையார்கமழ்
சடையார்கழல்
பரவி
உருகும்மன
முடையார்தமக்
குறுநோயடை யாவே. 6
103. கரிகாலன
குடர்கொள்வன
கழுதாடிய காட்டில்
நரியாடிய
நகுவெண்டலை
யுதையுண்டவை யுருள
எரியாடிய
விறைவர்க்கிட
மினவண்டிசை முரல
அரியாடிய
கண்ணாளொடும்
அண்ணாமலை யதுவே. 7
__________________________________________________
வாழ்த்தி உருகும்
மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும்
வாரா.
கு-ரை: பிறை சேர்
கடல் - ஒருகலைப்பிறை உண்டாதற்கு இடமாகிய
பாற்கடல். பருகுந்தனை துணிவார் - உட்கொள்ளும்
அளவிற்குத் துணிவுடையவர்.
பொடி - விபூதி. கருகும்
மிடறு - கருமை ஒருகாலைக்கு ஒருகால்
மிக்குத்தோன்றும் கழுத்து.
7. பொ-ரை: கரிந்த
கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும்
ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி
விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள்
உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும்
சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசைபாடச்
செவ்வரி பரந்த கண்களை உடைய உமையம்மையோடு
எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.
கு-ரை: கரிகாலன -
எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால்
கரிந்துபோன கால்களையுடையன. கழுது - பேய்.
நரியாடிய - நரிகள்
உருட்டி விளையாடிய. எரியாடிய - இடுகாட்டில்
தீப்பிழம்பில் நின்றாடிய. அரி - செவ்வரி.
|