104. ஒளிறூபுலி
யதளாடையன்
உமையஞ்சுதல்
பொருட்டால்
பிளிறூகுரன்
மதவாரண
வதனம்பிடித்
துரித்து
வெளிறூபட
விளையாடிய
விகிர்தன்னிரா
வணனை
அளறூபட
வடர்த்தானிடம்
அண்ணாமலை யதுவே. 8
105. விளவார்கனி
படநூறிய
கடல்வண்ணனும்
வேதக்
கிளர்தாமரை
மலர்மேலுறை
கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய
அண்ணாமலை யண்ணல்
தளராமுலை
முறுவல்லுமை
தலைவன்னடி சரணே. 9
__________________________________________________
8. பொ-ரை: ஒளி
செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும்,
உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம்
பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன்
தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும்,
இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த
வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது
இடம் திருவண்ணாமலை.
கு-ரை: ஒளிறூபுலியதள் -
ஒளிசெய்யும் புலித்தோல், பிளிறூ வெளிறூ அளறூ என்ப
சந்தம் நோக்கி நீண்டன. மதவாரணம் - மதம்
பிடித்த யானை. வதனம் பிடித்து உரித்து - முகத்தில்
திருவடியையூன்றிப் பிடித்துக்கொண்டு உரித்து,
வெளிறுபட விளையாடிய - வெள்ளையாக விளையாடிய,
வயிரமில்லாத மரத்தை வெளிறு என்றல்போல,
கபடமின்றி விளையாடுதலை இங்ஙனம் கூறி
இன்புற்றார். அளறுபட - மலைக்கீழகப்பட்டு
நசுங்கிச் சேறாக. அடர்த்தான் - நெருக்கியவன்.
9. பொ-ரை: விள
மரத்தின் கனியை உகுப்பது போல அம்மரவடிவாய்
நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய
திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை
மலர்மேல் உறையும்
|