106. வேர்வந்துற
மாசூர்தர
வெயினின்றுழல்
வாரும்
மார்பம்புதை
மலிசீவர
மறையாவரு வாரும்
ஆரம்பர்த
முரைகொள்ளன்மின்
அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப்
படையானல்ல
கழல்சேர்வது
குணமே. 10
__________________________________________________
குற்றம் அற்ற
புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண
இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத
தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய
உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின்
திருவடிகளே நமக்குக் காப்பு.
கு-ரை: விளவு ஆர்
கனிபட நூறிய கடல்வண்ணன் - விளாமரமாய் நின்ற
கபித்தன் அழியக்கொன்ற கண்ணபிரான் கேடில்
புகழோன் - அழியாப் புகழ் பெற்ற பிரமன். அளவா
வண்ணம் - தம்முட் பகைகொண்டு கலவாதபடி. இது
இத்தலத்தில் பிரம விஷ்ணுக்கள்
செருக்கிச்செய்த சண்டையைத் தீர்க்கப்
பெருமான் தீப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற
தலவரலாற்றுக் குறிப்பை விளக்குவது. உண்ணத்
தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை
என்பார் தளராமுலை என்றார். தனது நகில் கொண்டும்
இறைவனைத் தன்வசமாக்கியவள் என்பது
குறிப்பிக்கப் பெற்றது.
10. பொ-ரை: உடலில்
வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில்
நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய
சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து
வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித்
தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின்,
அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர்.
திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய
வெண்மையான மழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும்
ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே
மேலானகுணம்.
கு-ரை: வேர் -
வியர்வை. மாசு - அழுக்கு. சீவரம் - மஞ்சள் நிற ஆடை.
மார்பு புலப்படாதவண்ணம் மறைத்தல்
சமணத்துறவியர் இயல்பு. ஆரம்பர் - தொடக்க
நிலையிலுள்ளார்; ஆரம்பவாதிகள் போதிய
பயிற்சியில்லார் என்பதாம்.
ஆடம்பரமில்லாதவர்கள் என்பதுமாம்.
|