பக்கம் எண் :

358திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வண்டாமரை மலர்மேன்மட

வன்னந்நடை பயில

வெண்டாமரை செந்தாதுதிர்

வீழிம்மிழ லையே. 9

117. மசங்கற்சமண் மண்டைக்கையர்

குண்டக்குண மிலிகள்

இசங்கும்பிறப் பறுத்தானிடம்

இருந்தேன்களித் திரைத்துப்

பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள்

ஒளிகொண்டெழு பகலோன்

விசும்பைப்பொலி விக்கும்பொழில்

வீழிம்மிழ லையே. 10

__________________________________________________

தாமரை சிவந்த தாதுக்களை உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின.

கு-ரை: உலகுண்டான் - ஏழுலகையும் தன்வயிற்றில் அடக்கிய திருமால். அவைகண்டான் - அந்த உலகைப் படைத்த பிரமன்.

10. பொ-ரை: மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற்குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும், பசுமை நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.

கு-ரை: மசங்கல், மயங்கல் - மயக்கம். மண்டை - பிச்சையேற்கும் பனையோலைக்குடைப் பாத்திரம். குண்டர் - அறிவற்றவர். இசங்கும் - வினைவயத்தான் பொருந்திய. இருந்தேன் - பெரிய வண்டு; கரியவண்டுமாம். பசும் பொற்கிளி - பசுமை நிறமும் பொன் போலுஞ் செந்தாளும் உடைய கிளி. திருவீழிமிழலைப் பொழில்