115. முன்னிற்பவ
ரில்லாமுர
ணரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித்
தெடுத்தான்முடி
தடந்தோளிற
வூன்றிப்
பின்னைப்பணிந்
தேத்தப்பெரு
வாள்பேரொடுங்
கொடுத்த
மின்னிற்பொலி
சடையானிடம்
வீழிம்மிழ லையே.
8
116. பண்டேழுல
குண்டானவை
கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை
கோயின்னிறை
பொய்கை
__________________________________________________
8. பொ-ரை: தன்னை
எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற
அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள கயிலாய
மலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள்
தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால் இடருழந்த
அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப்
பெரிதாகிய வாள், இராவணன் என்ற பெயர்
ஆகியனவற்றைக் கொடுத்தருளிய மின்னல் போலப்
பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம்
திருவீழிமிழலையாகும்.
கு-ரை: முன் நிற்பவர்
இல்லா முரண் அரக்கன் - தன்னொடு எதிர்த்து நின்று
பொருவார் யாரும் இல்லா வலிமைபெற்ற
தசக்கிரீவன். இற - இற்றறும்படி. ஊன்றி - வலக்காற்
பெருவிரல் நுனியை ஊன்றி. பெருவாள் - சந்திரகாசம்
என்னும் வாள். பேர் - மலைக் கீழகப்பட்டு
அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்;
கீர்த்தியுமாம். இதனால் ஆன்மாக்கள் முனைப்புற்ற
காலத்து மறக் கருணை காட்டித் தண்டித்து நற்புத்தி
வரச்செய்து, ‘நின்னல்லது உறு துணை வேறில்லை‘ என
உணர்ந்து பணிந்த காலத்து அருள் செய்தல்
கூறப்பட்டது.
9. பொ-ரை: முன்னொரு
காலத்து ஏழுலகையும் தன் வயிற்றில்
அடக்கிக்காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப்
படைத்தருளிய நான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி
பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும்
கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த
செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில
வெண்
|