பக்கம் எண் :

 13. திருவியலூர்371



உம்மென்றெழு மருவித்திரள்

வரைபற்றிட வுரைமேல்

விம்மும்பொழில் கெழுவும்வயல்

விரிநீர்விய லூரே. 3

133. அடைவாகிய வடியார்தொழ

வலரோன்றலை யதனில்

மடவாரிடு பலிவந்துண

லுடையானவ னிடமாம்

கடையார்தர வகிலார்கழை

முத்தம்நிரை சிந்தி

மிடையார்பொழில் புடைசூழ்தரு

விரிநீர்விய லூரே. 4

__________________________________________________

உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம், உம் என்ற ஒலிக் குறிப்போடு அருவிகள் குடகு மலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும்.

கு-ரை : செம்மென்சடை - செம்மையாகிய மெல்லிய சடை. மடவார் - கர்மபிரமவாதிகளான தாருகாவனத்து முனிவர் பெண்கள். பலி - பிச்சை. உம் - ஒலிக்குறிப்பு. உரை - புகழ்.

4. பொ-ரை: அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரம கபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும்.

கு-ரை: அடைவாகிய அடியார் - தத்தம் நெறியினின்று வழி படுமடியவர்கள். அடைவு - முறைமை.

அலரோன் - பிரமன். கடையார் - பள்ளர்கள். அகில்ஆர் கழை எனப்பிரித்து அகிலும் நிறைந்த மூங்கிலும் எனப் பொருள் காண்க.