பக்கம் எண் :

372திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



134. எண்ணார்தரு பயனாயய

னவனாய்மிகு கலையாய்ப்

பண்ணார்தரு மறையாயுயர்

பொருளாயிறை யவனாய்க்

கண்ணார்தரு முருவாகிய

கடவுள்ளிட மெனலாம்

விண்ணோரொடு மண்ணோர்தொழும்

விரிநீர்விய லூரே. 5

135. வசைவிற்கொடு வருவேடுவ

னவனாய்நிலை யறிவான்

திசையுற்றவர் காணச்செரு

மலைவானிலை யவனை

அசையப்பொரு தசையாவண

மவனுக்குயர் படைகள்

விசையற்கருள் செய்தானிடம்

விரிநீர்விய லூரே. 6

__________________________________________________

5. பொ-ரை: தியானத்தின் பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும், உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்.

கு-ரை: எண் - தியானம். எண்ணார்தருபயன் - தியானப்பயன். அயனவனாய் - பிரமனாய் என்றது. பவமலி நினைவொடு பதுமனன் மலரது மேவிய நிலையை. மிகுகலையாய் - ஒன்றினொன்று மிகுந்திருக்கின்ற கலைப்பொருள்களாய். பண் - சந்தம். கண்ணார் தரு உரு - கண்நிறைந்த வடிவம். பேரழகன் என்றபடி.

6. பொ-ரை: வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில்