136. மானார்அர வுடையானிர
வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரு முயிரானுயர்
விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென
நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே. 7
__________________________________________________
நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி,
அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன்
அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை
அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம்
மிக்க வியலூராகும்.
கு-ரை: வசைவில் - வளைந்தவில். நிலையறிவான் - அருச்சுனனுடைய
உண்மையான தவநிலையை உணர்த்தும்படி. செரு - போர்.
நிலையவன் -
ஒரு காலில் நின்று தவம் செய்யும் விசயன்.
7. பொ-ரை: தலைமையான அரவை அணிந்தவனும்,
தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும்,
பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும்,
உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என
நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப்
பயனால் மேல்
உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர்வளம்
சான்ற வியலூராகும்.
கு-ரை: மான் - மான் தோல்.
இரவுடையான் - இரத்தற்றொழில் உடையான். உடையான்
என்பது நடுநிலைத்தீவகமாக பகல் நட்டம் உடையான்
எனப்பின்னதனோடும் சென்றியையும். ஊனார் தரும் உயிரான் - உடம்பினுள் எங்கும் வியாபகமாய்
இருக்கும் உயிர்க்குயிராய் இருப்பவன். உயர்வு
இசையான் - பசுபோத முனைப்பால் உயர்வாக எண்ணுகின்ற
உயிர்களிடத்துப் பொருள்கள் எல்லாமாய்
இருக்கின்ற இறைவன். மேல்நாடிய விண்ணோர் தொழும்
என்றது விண்ணோர்கள் தாம் செய்த புண்ணியப்பயனை
நுகர்தலிலேயே மயங்கி நிற்பவராதலின், மேல்நாடற்குரிய
சிறப்பு என்றும் இல்லாதவர் என்று குறிப்பித்தவாறு.
|