பக்கம் எண் :

374திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


137. பொருவாரெனக் கெதிராரெனப்

பொருப்பையெடுத் தான்றன்

கருமால்வரை கரந்தோளுரங்

கதிர்நீண்முடி நெரிந்து

சிரமாயின கதறச்செறி

கழல்சேர்திரு வடியின்

விரலாலடர் வித்தானிடம்

விரிநீர்விய லூரே. 8

138. வளம்பட்டலர் மலர்மேலயன்

மாலும்மொரு வகையால்

அளம்பட்டறி வொண்ணாவகை

யழலாகிய வண்ணல்

உளம்பட்டெழு தழற்றூணதன்

நடுவேயொரு வுருவம்

விளம்பட்டருள் செய்தானிடம்

விரிநீர்விய லூரே. 9

________________________________________________

8. பொ-ரை: எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

கு-ரை: எனக்கு எதிர் பொருவார் ஆர் என, எனக் கூட்டுக. பொருப்பை எடுத்தான் - இராவணன். கருமால்வரை - வலிய பெரிய மலையை ஒத்த. முடிநெரிந்து - கிரீடம் நெரிதலால். சிரமாயின கதற - சிரங்கள் பத்தும் கதற. அடர்த்தான் என்னாது அடர்வித்தான் என்றது அவனுடைய ஆணவம் குறைந்து பரிபாகம் ஏற்படும்வரை வருத்தி என்ற நயம்தோன்ற நின்றது.

9. பொ-ரை: வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய்