பக்கம் எண் :

 13. திருவியலூர்375



139. தடுக்காலுடன் மறைப்பாரவர்

தவர்சீவர மூடிப்

பிடக்கேயுரை செய்வாரொடு

பேணார்நமர் பெரியோர்

கடல்சேர்தரு விடமுண்டமு

தமரர்க்கருள் செய்த

விடைசேர்தரு கொடியானிடம்

விரிநீர்விய லூரே. 10

________________________________________________

வருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல்வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

கு-ரை: வளம்பட்டு அலர் மலர் - திருமாலின் உந்தியினின்றும் தோன்றியது ஒன்றாதலால், வளமான தாமரை மலர். அளம் பட்டு - வருந்தி. உளம் பட்டு - மனம் உடைய; பட என்பது பட்டெனத் திரிந்து நின்றது எதுகைநோக்கி.

விளம்பட்டு - வெளிப்பட்டு. விள்ளப்பட்டு என்பது எதுகை நோக்கி விளப்பட்டு ஆகி அது மெலிந்து விளம்பட்டு என நின்றது. விளம் - அகந்தை. செருக்கொழிய என்றுமாம்.

10. பொ-ரை: ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத் தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.

கு-ரை: தடுக்கு - ஓலைப்பாய். சீவரம் - பொன்நிற ஆடை. பிடக்கு - பிடகம் என்னும் புத்த நூல். நமர்பெரியோர் - நம்மவர்களாகிய பெரியோர். கடல் - பாற்கடல். விடமுண்டு அமுது அமரர்க்கு அருள்செய்த - ஆலகால விடத்தைத் தாம் அருந்தி, இனிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்த கருணையைக் காட்டியவாறு.