பக்கம் எண் :

376திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



140. விளங்கும்பிறை சடைமேலுடை

விகிர்தன்விய லூரைத்

தளங்கொண்டதொர் புகலித்தகு

தமிழ்ஞானசம் பந்தன்

துளங்கில்தமிழ் பரவித்தொழு

மடியாரவ ரென்றும்

விளங்கும்புக ழதனோடுயர்

விண்ணும்முடை யாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.

கு-ரை: விகிர்தன் - சதுரப்பாடுடையவன். தளம் - இடம். துளங்குஇல் தமிழ் - நடுக்கமில்லாத தமிழ்.

திருவையாற்றுப் புராணம்

வீதி கண்டவர் சீசீசீயென வேத

வஞ்சகர் பாழ்வாய் வீணர்கள்

வாதி டுஞ்சமண் வேரோ டேயற;

வாழ்க அந்தணர் வானோரான்என

ஓது பண்டித ஞானா சாரியன்

யோக சிந்தையன்ஓதா தோதிய

வாதி வெங்குரு நாடாள் வேதியன்

ஆய புங்கவன் மேன்மேல் வாழிய.

- ஞானக்கூத்தர்.