164. மலையான்மகள் கணவன்மலி
கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவானிடம்
பொழில்சூழ்புள மங்கைக்
கலையான்மலி மறையோரவர்
கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி
யாலந்துறை யதுவே. 2
165. கறையார்மிட றுடையான்கமழ்
கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன
லுடையான்புள மங்கைச்
__________________________________________________
பாடலால் அறிக. வினையடையா என்றது
ஆகாமியங்கள் அடையா என்பதாம்.
2. பொ-ரை: இமவான் மகளாகிய பார்வதி
தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த
குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக்
களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள்
பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள்
மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி
வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி
நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதும் ஆகிய
ஆலந்துறை என்னும் தலத்திலுள்ள புள்ள மங்கை என்னும்
கோயிலாகும்.
கு-ரை: கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவான் இடம் பொழில்சூழ் புளமங்கை -
கடல் சூழ்தலால் வந்த பண்பாகிய குளிர்ச்சியோடு
புலால் மணத்தைக் களைகின்ற பெரிய இடம் (மணந்
தருகின்ற) பொழில் சூழ்ந்த புள்ளமங்கை என்க.
களைவான் என ஒரு சொல்லாக்கி, நிற்பவனாகிய
இறைவன் என்பாரும் உளர். புலை களைதல்
பொழிலின் செயலேயன்றி இறைவன் செயலாகாமை ஓர்க.
3. பொ-ரை: விடக்கறை பொருந்திய
கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை
மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை
அணிந்தவனுமாய சிவபிரானுக்
|