பக்கம் எண் :

 16. திருப்புள்ளமங்கை399


கமழும் காழிப் பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

கு-ரை: பொந்து - மரப் பொந்துகள். இப்பதிகச் சந்தம், படிக்குங் காலத்தேயே பரவசமாய் ஆட வருந்தன்மையது என்பது குறித்தவாறு.

பேரூர்ப் புராணம்

தவந்த வென்பினைப் பெண்ணெனப் படைத்தும் சார்மழவன்
உவந்த பெண்ணுயி ரளித்துமொட் டாதெதிர் புத்தன்
நிவந்த சென்னியை யுருட்டியு முத்தொழில் நிறுவிப்
பவந்த டுத்துயிர்க் கருளுஞ்சொற் பனவனைப் பணிவாம்.

- கச்சியப்ப முனிவர்.

திருவானைக்காப் புராணம்

மழலை யின்னமு தூற்றெழு மாசைவள் ளத்துக்
குழலின் மென்மொழி யுமையவள் கொடுத்தபால் கமழப்
பழகு செந்தமிழ்ப் பாடலந் தேன்வடிந் தாடு
மழக னஞ்செவி யூட்டிய அறிஞனை யடுப்பாம்.

- கச்சியப்ப சுவாமிகள்.

சங்கற்ப நிராகரணம்

ஈசனரு ளாலெரியிட் டேடெடுத்து வாதுவென்ற
பூசுரனைப் பாதநினைப் பாம்.

- உமாபதி சிவாசாரியார்.