175. மலையார்தரு மடவாளொரு
பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி
நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர்
காவன்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரு
மிடும்பாவன மிதுவே. 2
176. சீலம்மிகு சித்தத்தவர்
சிந்தித்தெழு மெந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரு
முலகத்தவர் நலமார்
__________________________________________________
கூட்டுக. போககாமிகளாகிய காதலர்கள்
அருச்சனைசெய்து அதற்குக் காரணமாகிய தனத்தை யடைகின்றனர்.
கடலில் அலைகள் இருப்பதால் கப்பல்களை உந்தி
மிகுகின்றன. அரக்கன் - இடும்பன். சினம்
ஆர்தரு, திறல்வாள், எயிறு என்பன அரக்கனுக்குத்
தனித்தனியே அடைமொழியுமாம். இனமாதவர்
இறைவர் - கூட்டமாகிய முனிவர்களுக்கு இறைவர்;
என்றது சிவபெருமானை.
2. பொ-ரை: இமவான் மகளாய்
மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை
ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும்
குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும்,
புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது
பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை
அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம்
இதுவேயாகும்.
கு-ரை: மலையார் - மலையரசனாகிய
இமவான். தரு - பெற்ற, மலை ஆர்தரு மடவாள்
எனப்பிரித்து மலையிடத்து வசிக்கின்ற உமாதேவி
என்பாரும் உளர். நிலையார்தரு நிமலன் - என்றும்
எங்கும் நிற்றலையுடைய நித்தியப் பொருளாகிய
இறைவன். ஒளிசேர் இடும்பாவனம், பொழில்
சூழ்தரும் இடும்பாவனம் எனக் கூட்டுக. கலை ஆர்தரு
புலவோர் - ஒளிமிகுந்த தேவர்கள்.
3. பொ-ரை: தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட
முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய
சிவபிரான் எழுந்தருளிய
|