கோலம்மிகு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும்
இடும்பாவன மிதுவே. 3
177. பொழிலார்தரு குலைவாழைக
ளெழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர்
தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
எழிலார்தரு மிறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 4
__________________________________________________
தலம், நிலப்பரப்பினும் மிக்க
பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச்
சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும்
மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள
குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த
இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.
கு-ரை: சீலம் - காட்சிக்கெளியனாந்தன்மை.
இயமம் முதலான தவ ஒழுக்கங்களும் ஆம். ஒழுக்கம்
என்றும் ஆம். சிந்தித்தெழும் எந்தை என்றது,
‘கொழுநற்றொழு தெழுவாள்‘ போல முனிவர்கள் சிந்தித்துக்
கொண்டே எழுவர் என்பதாம். அன்றி ஒழுக்கம்
மிக்க மனத்தை யுடையவர்களைத் திருவுள்ளத்தடைத்துத்
திருவோலக்கம் கொண்டருளுகின்ற எந்தை. ஞாலம்
மிகுகடல் - நிலத்தின் பரப்பைக் காட்டிலும் மிகுந்திருப்பதாகிய
கடல். நிலப்பரப்புக் கால்பங்கும், நீர்ப்பரப்பு
முக்கால்பங்கும் என்பது மரபாகலின். கோலம் -
அழகு, நலமார் இடும்பாவனம் எனக்கூட்டுக.
உலகத்தவர் நன்மையடைதற்கு (முத்தியின்பத்தை
யடைதற்கு) இடமாகிய இடும்பாவனம்.
4. பொ-ரை: குலைகள் தள்ளிய வாழைகள்
செழித்துள்ள பொழில்கள் சூழப் பெற்றதும், அழகு
திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால்
சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது
ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை
உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான
|