பக்கம் எண் :

 17. திருஇடும்பாவனம்403



178. பந்தார்விர லுமையாளொரு

பங்காகங்கை முடிமேல்

செந்தாமரை மலர்மல்கிய

செழுநீர்வயற் கரைமேல்

கொந்தார்மலர் புன்னைமகிழ்

குரவங்கமழ் குன்றில்

எந்தாயென விருந்தானிடம்

இடும்பாவன மிதுவே. 5

__________________________________________________

குன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.

கு-ரை: முன்றில் இடும்பாவனம் இது எனக்கூட்டுக. சோலைகளில் விளங்குகின்ற குலைவாழைகள் அழகுமிகுகின்ற காலத்துத் தொண்டர்கள் தொழுது ஆடுகின்ற முன்றிலையுடைய குன்று எனவும், அத்தகைய குன்றில் இறைவர்க்கு இடம் இத்தகைய இடும்பாவனம் எனவும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. குலைவாழைகள் அழகோடுகூடி விளங்கும்போது மஞ்சள் வெயிற்படும் மாலைக்காலம்; அப்போது அடியார்கள் தொழுது ஆனந்த மேலீட்டால் ஆடுகின்றார்கள் என்பது. குழலார் தருமலர் மென்முலை மடவார் - குழலின் கண் பொருந்திய மலரையும் மெல்லிய முலையினையுமுடைய மடவார் என்கின்றது வேட்டுவ மகளிரை. எழில் - அழகு. எழுச்சியுமாம்.

5. பொ-ரை: பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள் பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்.

கு-ரை: பந்தார் விரல் உமையாள் ஒரு பங்கா - பந்தணை மெல்விரலி எனவும், அம்மைக்கொரு நாமம் உண்மையைக் குறிப்பித்தவாறு. பங்காக என்பது பங்கா எனச் செயவென்னெச்சத்தீறு கெட்டது. பங்காகக் கரைமேல், குன்றில் இருந்தான் எனக்கூட்டுக. கங்கையை முடிமேற்கொண்டு என ஒரு சொல் வருவித்து முடிக்க. வயற்கரைமேல் புன்னை, மகிழ்குரவம், கமழ்குன்றில் என்றது இடும்பாவனத்தலம் மருதநிலமும் நெய்தல் நிலமும் தம்முள் மயங்கியிருந்தமைபுலனாம்.