நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநல மிகுவரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
வரும் சந்ததி, இறைவனடியார் என்ற
பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா
நலங்களும் மிகப் பெறுவர்.
கு-ரை: இதுவரை பாடல்தோறும்
சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும்,
அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும் கூறிவந்த
பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப்
படிப்பார் எய்தும் பயனைத் தொகுத்துக்
கூறுகின்றார். குலம் (6) நிலம் (8) நிறை திரு (2)
உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி
(9) அடிமை (7) இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு
பாடலிலும் இருப்பதை ஓர்ந்து உணர்க.
அவிநாசி புராணம்
செம்புகலி லெழுதுபுகழ்
வளவர்பிரான்
திருமகளார் திருநின் றோங்க
வெம்புகலி யமண்மாறத்
தென்னர்புவி
வெண்ணீறு விளங்கி வாழ
நம்புகலி யாளுடைய பிள்ளையெனும்
தெள்ளுதமிழ் ஞான தீபம்
பம்புகலி நீர்த்தரங்கப்
பொய்கைமருங்
கலர்கமல
பதம்பெற் றுய்வாம்.
- இளையான் கவிராயர்.
திருவிளையாடற் புராணம்
கடியவிழ் கடுக்கை வேணித்
தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான்
கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக்
காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்.
- பரஞ்சோதி முனிவர்.
|
|