226. குணமறி வுகணிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினினல
கணமரு வியசிவ புரநினை
பலரெழி லுருவுடை யவர்களே. 10
227. திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபது நவில்பவர்
__________________________________________________
10.பொ-ரை: குணங்களும் அறிவும்
நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப்
பொருள்களும், உரைக்கும் உரையால்
உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே
அழிந்து தோன்றுமியல்பின. இது திண்ணம் எனவும்,
கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான
அறிவினராகிய புத்தர்களும், தமது கையில்
நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும்,
உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி,
இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும்
சிவபுரமாகும். அதனை நினைபவர் அழகிய உருவோடு
விளங்குவர்.
கு-ரை: குணம் அறிவு முதலாயின
நிலையில்லாதன; உலகப் பொருள்களும் அங்ஙனமே
என்னும் கணபங்கவாதிகளான புத்தர்களும்
சமணர்களும் அறிவரிய அரன்பதியை நினைப்பவர்
அழகான வடிவத்தை யடைவர் என்கின்றது. குணம்
அறிவுகள் நிலையில எனப்பிரிக்க. செதுமதி -
குற்றம்பொருந்தியபுத்தி. கை உணல் உடையவர் -
கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.
11. பொ-ரை: இவ்வுலகில்
புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய
சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுர
நகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய
ஞானசம்பந்தன் பாடிய உரைச் சிறப்பு வாய்ந்த
இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி
வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த
செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை
வண்மை, மிக்க வெற்றித் திரு, இவ்வுலகிடை
தொடர்ந்து
|