பக்கம் எண் :

 21. திருச்சிவபுரம்441


225. அடன்மலி படையரி யயனொடு

மறிவரி யதொரழன் மலிதரு

சுடருரு வொடுநிகழ் தரவவர்

வெருவொடு துதியது செயவெதிர்

விடமலி களநுத லமர்கண

துடையுரு வெளிபடு மவனகர்

திடமலி பொழிலெழில் சிவபுர

நினைபவர் வழிபுவி திகழுமே. 9

__________________________________________________

கு-ரை: இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனது கயிலையையெடுத்த இராவணனது முடியை நெரித்த முதல்வன் நகரத்தை நினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வர் என்கின்றது.

அசைவுஉறுதவம் - வருத்தம்மிக்க தவம். முயல் வினில் - முயன்றதால். நிசிசரன் - இராவணன்.

9. பொ-ரை: வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.

கு-ரை: அயன்மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி, அவர்கள் துதிசெய்யக் கண்ணுதல் கண்டக் கறையோடு கூடிய தனதுருவத்தைக்காட்டிய இறைவன் நகரத்தை நினைப்பவர் வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது.

அடல் மலிபடை - வலிமை மிக்க சக்கரம், அவர் வெருவொடுதுதி அது செய்ய - அவர்கள் அச்சத் தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன் எனக் கூட்டுக. விடமலிகளம் - நீலகண்டம். நுதலமர்கண் அது உடை உரு - நெற்றிக் கண்ணையுடைய உரு. நினைபவர் வழி புவிதிகழும் எனப்பிரிக்க. வழி - வமிசம்.