இதமமர் புவியது நிறுவிய
வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர
நினைபவர் நிலவுவர் படியிலே. 7
224. அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே. 8
__________________________________________________
நிறுத்திக் காத்த அழகிய திருமால்
வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை
உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை
நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.
கு-ரை: ஆதிவராகமான அரிவழிபட
அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும்
விளங்குவர் என்கின்றது. கதம் மிகு - கோபம்
மிகுந்த. கருவுருவொடு - கறுத்த மேனியோடு.
உகிர்இடை - நகங்களின் இடையே. மதம் மிகு
நெடுமுகன் அமர் - மதம் மிக்க நீளமான முகத்திலே
இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு - பிறைமதியை
யொத்த கோரப்பல். நுதி - நுனி. இதம்
அமர் புவி - இன்பத்தோடு இருக்கின்ற பூமி.
ஆதிவராக உருவெடுத்த திருமாலின் சத்தி
பூமியாதலின், அவள் வராகத் தந்தத்தில்
இதமாக இருந்தாள் என்றார். பதம் - திருவடி.
8. பொ-ரை: உடல் வருத்தத்தைத்
தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன்
அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக்
கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது
பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின்
கீழ்ச் செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில்
உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால்
அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி
அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி,
எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும்.
அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில்
எஞ்ஞான்றும் வாழ்வர்.
|