222. சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவருள் சிவபுர நினைபவர்
திகழ்குல னிலனிடை நிகழுமே. 6
223. கதமிகு கருவுரு வொடுவுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிக ழெயிறத னுதிமிசை
__________________________________________________
6. பொ-ரை: வேதங்களையும்,
பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும்,
குற்றம் அறப்பயின்று, உலகியலில்
பழிபாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய்
உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள
பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட
அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை
சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள்
தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை
நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று
நிகழும்.
கு-ரை: வேதம் முதலான கலைகளைக்
குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில்
அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி
ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற
பரமசிவன் உறை பதியைச் சிந்திப்பவர் குலம்
நிலத்திடை நீடுவாழும் என்கின்றது.
பலநலமுதல்கலை - பலவாகிய நன்மைகளைக் கருதுகின்ற
கலை. துகள் அறுவகை - சந்தேக விபரீதங்கள்
அறும்படி, உருவு இயல் - தோற்றத்தின் அழகு.
தனது அடி அடைவகை: இது சாயுச்சியம் அளிப்பது
அறிவித்தது.
7. பொ-ரை: திருமால் வராக
அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது
நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண
என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட
அவ்வராகத்தின் முகத்திற்பொருந்திய வளைந்த
பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக
அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண்
அவியாது
|