பக்கம் எண் :

448திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


233. கறைமலி திரிசிகை படையடல்

கனன்மழு வெழுதர வெறிமறி

முறைமுறை யொலிதம ருகமுடை

தலைமுகிழ் மலிகணி வடமுகம்

உறைதரு கரனுல கினிலுய

ரொளிபெறு வகைநினை வொடுமலர்

மறையவன் மறைவழி வழிபடு

மறைவன மமர்தரு பரமனே. 6

234. இருநில னதுபுன லிடைமடி

தரவெரி புகவெரி யதுமிகு

பெருவெளி யினிலவி தரவளி

கெடவிய னிடைமுழு வதுகெட

__________________________________________________

6. பொ-ரை: குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம், வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம், கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான், முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை, முடைநாறும் பிரம கபாலம், முகிழ் போலும் கூரிய கணிச்சி, வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும், தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப் பெறுபவனுமாகிய சிவபிரான் மறை வனத்தில் உறையும் பரமன் ஆவான்.

கு-ரை: இது உலகத்தில் உயர்வதற்காகப் பிரமன் வழிபட்ட மறைவனத்து இருந்தருள் பரமன் திரிசூலம் முதலியவற்றைத் தாங்கிய எட்டுக்கரங்களை யுடையவன் என்கின்றது. கறை - இரத்தக்கறை. திரிசிகை - முத்தலைச்சூலம். அடல்கனல் மழு - வருத்தும் தழல்வடிவாகிய மழுப்படை. எழுதர வெறி மறி - திருக்கரத்தை விட்டு எழும்புவது போலும் வெறித்தகண்ணையுடைய மான். முடைதலை - முடைநாற்றம் வீசும் பிரமகபாலம். முகிழ் மலி கணி - முகிழ்போலும் கூரிய குந்தாலிப்படை. வடமுகம் - வடவாமுகாக்கினி. ஒளி - புகழ். ‘ஒளிநிறான்’ என்பதும் ஓர்க. மறைவழி - வேதவிதிப்படி. இறைவன் படையிலங்கு கரம் எட்டுடையானாக இருப்பது குறிக்கப்பெறுகிறது.

7. பொ-ரை: பேரூழிக் காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண்புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி