232. கதிமலி களிறது பிளிறிட
வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி
பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர்
மறைவன மமர்தரு பரமனே. 5
__________________________________________________
ஆகியோர் தன்னை வழிபட அவர்கள்
மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம்
உறையும் பரமன் ஆவான்.
கு-ரை: இது மக்கள் முனிவர் இவர்கள்
மலம் அகன்று உய்யும் வகை திருவுளம்பற்றிய
மறைவனத்திறைவனே கொன்றையும், கபாலமும்,
ஊமத்தமும், கங்கையும், அரவும்,
பிறையும் பொதிந்த சடைமுடியினன் என்கின்றது.
இதழி - கொன்றை, நகுதலை - இறந்த பிரமனது
மண்டையோடு. கனகி - ஊமத்தை, முனிவர்கள்
தம் மலம் அறுவகை எனப்பிரிக்க. நகுதலை,
மதி, அரவு முதலியவற்றின் தீமைகளைநீக்கி
அருள் செய்கின்றான் என்பது.
5. பொ-ரை: நடை அழகுடன் தன்னை
எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை
உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த
பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும்
ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல
கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும்,
விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும்
ஆகிய முனிவர் குழாங்களும், மிக்க தவத்தை
மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை
வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில்
அமர்ந்தருளும் பரமன் ஆவான்.
கு-ரை: இது பலகலையாகம வேத நூல்களை
முறையாகக்கற்று, கற்றவண்ணம் ஒழுகுகின்ற
முனிவர்களும், மிகத் தவஞ்செய்யும் அதி
நிபுணர்களும் வழிபடும் மறைவனநாதனே யானையை
உரித்துப் போர்த்த பெருவீரன்,
பசுபதிமேல்வரு பசுபதி என்கின்றது.
கதி - நடை. அதிகுணன் - குணங்களான்
மிகுந்தவன். பசு - இடபம். பசுபதி -
ஆன்மாக்கள் அனைவர்க்கும் தலைவன். விதி -
செயல்முறை.
|