பக்கம் எண் :

446திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


230. இழைவளர் தருமுலை மலைமகள்

இனிதுறை தருமெழி லுருவினன்

முழையினின் மிகுதுயி லுறுமரி

முசிவொடு மெழமுள ரியொடெழு

கழைநுகர் தருகரி யிரிதரு

கயிலையின் மலிபவ னிருளுறும்

மழைதவழ் தருபொழி னிலவிய

மறைவன மமர்தரு பரமனே. 3

231. நலமிகு திருவித ழியின்மலர்

நகுதலை யொடுகன கியின்முகை

பலசுர நதிபட வரவொடு

மதிபொதி சடைமுடி யினன்மிகு

தலநில வியமனி தர்களொடு

தவமுயல் தருமுனி வர்கடம்

மலமறு வகைமன நினைதரு

மறைவன மமர்தரு பரமனே. 4

__________________________________________________

3. பொ-ரை: அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும், குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள், பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ, தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.

கு-ரை: இது மறைவனத்துறையும் பரமனே மலைமகள் மணாளன், கயிலையின்பதி என்கின்றது. இழை - ஆபரணம். எழில் - அழகு. முழை - மலைக்குகை. அரி - சிங்கம். முசிவு, மெலிவு. முளரி - தாமரை. கழை - கரும்பு.

4. பொ-ரை: அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர், கபாலம், ஊமத்தை, கங்கை நதி, பட அரவு, பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான், பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள், தவம் முயலும் முனிவர்கள்