பக்கம் எண் :

450திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


னிடைமுழு வதுகெட - விருவர்களுடல் பொறையொடுதிரி யெழிலுருவுடையவன்" எனச் சங்கார முறைபற்றி வேதவாக்கியப் பொருளை வலியுறுத்தோதிய திருப்பாட்டோடும் முரணுமாலெனின், - அற்றன்று; 1வேதஞ்சிவாகமம் இரண்டும் செய்த முதற்கருத்தா பரமசிவ னொருவனேயாகலின், அவைதம்முண் முரணுமாறின்மையின், ஒரோவழிமுரணுவன போலத் தோன்றியவழி, முரணாகாதவாறு வன்மை மென்மைபற்றித் தாற்பரியங்கோடல் வேண்டும். அற்றாகலினன்றே 2தேயுமுதன் முப்பூதங்கட்கே தோற்றங்கூறி, "இம்முப்பூதமயமே பிரபஞ்சமெல்லாம்" என விரித்தோதிய சாந்தோக்கியவுபநிடதமும், ஆகாயமுதல் ஐந்திற்குந் தோற்றங்கூறி, "ஐம்பூதமயமே பிரபஞ்சமெல்லாம்" என்னும் தைத்திரீயவுபநிடதமும் தம்முண் முரணுவனபோலத் தோன்றுதலின், அங்ஙனம் முரணாமைப் பொருட்டு வன்மைமென்மைநோக்கித் தைத்திரீயத்திற் கூறியதே பிரமாணமெனவும், சாந்தோக்கியத்திற்கூறும் வாக்கியங்கட்கும் அதுவே தாற்பரிய மெனவும், உத்தரமீமாஞ்சையின் வியததிகரணத்துளோதியதூஉம்; மற்றும் ஆண்டாண்டு முரணாதவண்ணம் ஒன்று முக்கியப்பொருளும், ஒன்று தாற்பரியப்பொருளுமாக வைத்துப் பொருளொருமையுணர்த்தியதூஉ மென்க.

ஆதலின் இப்பகுதிக்கு நிலம் இரதத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற கந்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், நீர் உருவத்தோடு

__________________________________________________

யதி! தந்மாத்ர பஞ்ச காஜாதம் ததோ வ்யோமாதி பஞ்சகம்" என்னும் பவுட்கராகமத்தான் அறிக. பூதங்கள் ஒன்றினொன்று தோன்றுமென்னும் வேதவாக்கியம் "தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ" என்பதாம்.

- தைத்திரீயம் 2-1.

1சாந்தோக்கியத்தில், "தத்தேஜோ ஸ்ருஜத தத்தேஜ ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜா யேயேதி ததபோ ஸ்ருஜத சஸ்மா த்யத்ரக்வச சோசதி ஸ்வேததேவா புருஷஸ் தேஜஸ ஏவ ததத்யா போ ஜாயந்தே (6-2-3) தாஆப ஐக்ஷந்தே ப்ஹ்வ்ய ஸ்யாம பிரஜாயே மஹீதி தா அன்னம ஸ்ருநந்த (6-2-4)" எனவும், "தேஷாம் கல்பேஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜாநி பவத் யண்டஜம் ஜீவஜ முத்பிஜ் ஜமிதி" எனவும் வருதல்காண்க.

2பூதங்கள் ஒன்றினொன்று தோன்றுமென்னும் வேதவாக்கியம், "தஸ்மாத்வா ஏகஸ்மா தாத்மந ஆகாச சம்புத: ஆகாசா துவாயு: வாயோ ரக்னிஹி அக்னோ ராப: அசத்ப்ய:"

- ப்ருதிவீ தைத்திரயம் 2-1.