பக்கம் எண் :

 22. திருமறைக்காடு451


235. சனம்வெரு வுறவரு தசமுக

னொருபது முடியொடு மிருபது

கனமரு வியபுய நெரிவகை

கழலடி யிலொர்விர னிறுவினன்

இனமலி கணநிசி சரன்மகிழ்

வுறவருள் செய்தகரு ணையனென

மனமகிழ் வொடுமறை முறையுணர்

மறைவன மமர்தரு பரமனே. 8

236. அணிமலர் மகள்தலை மகன்அயன்

அறிவரி யதொர்பரி சினிலெரி

திணிதரு திரளுரு வளர்தர

வவர்வெரு வுறலொடு துதிசெய்து

__________________________________________________

கூடி விசிட்டமாய்நின்ற இரத தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் தீ பரிசத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற உருவ தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், காற்று சத்தத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற பரிச தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், ஆகாயம் பிரமமாகிய சதாசிவத்தால் அதிட்டிக்கப்படும் சத்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் பொருள் கோடலே மரபாம்.

8. பொ-ரை: மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர், வாழ்நாள், தேர், வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

கு-ரை: இது இராவணனுக்கு அருள் செய்த கருணையையுடையன் என்று அனைவரும் உணர ‘மறைவனம் அமர்தரு பரமன்’ இருக்கின்றான் என்கின்றது. சனம் - மக்கள். கனமருவிய புயம் - பருத்ததோள். இனம் மலி - அரக்கர் கூட்டத்தால் நிறைந்த. நிசிசரன் - இராவணன்.

9. பொ-ரை: அழகிய மலர்மகள் கேள்வனும், அயனும்