பக்கம் எண் :

462திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப் பெற்றுச் சிறந்து வாழ்வர்.

கு-ரை: கோலக்காவைப்பற்றிய இப்பாடல் பத்தையும் வல்லவர் மலைபோன்ற தம்வினையும் மாள ஓங்கி வாழ்வார்கள் என்கின்றது. வலங்கொள்பாடல் - திருவருள் வன்மையைக்கொண்ட பாடல் அல்லது வலமாகக் கொண்ட பாடல் என்றுமாம். உலம் - மலை.

குருவருள்: உலம் - மலை. மலையளவு பாவம் செய்திருப்பினும் நெறியாக இப்பதிகத்தை ஓதினால், மலையளவு வினைகளும் பொடியாக உயர்ந்த வாழ்வு பெறுவர். முடிவான பேரின்ப வாழ்வு பெறுவர் என்பதை உணர்த்துகின்றது. மேலும் ஞானசம்பந்தர் "மந்தரம் மன பாவங்கள் மேவிய, பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால், நந்திநாமம் நமச்சிவாயவே" என்ற பாடலாலும் இக்கருத்தை வலியுறுத்துவார்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலுங் கண்டருளிக்

கருணை கூர்ந்த

செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும் எழுதியநற்

செம்பொற் றாளம்

ஐயரவர் திருவருளால் எடுத்தபா டலுக்கிசைந்த

அளவால் ஒத்த

வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர் கைத்தலத்து

வந்த தன்றே.;

- சேக்கிழார்.