பக்கம் எண் :

 23. திருக்கோலக்கா461


கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே. 9

248. பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே. 10

249. நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
__________________________________________________

உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.

கு-ரை: அயனும் மாலுங் காணாத கூற்ற முதைத்த குழகன் பாதத்தை ஏத்தி வாழுங்கள் என்கின்றது. நாற்றம் - மணம். நாகத்தில் - ஆதிசேடனிடத்தில். ஏற்றான் - இடமாக ஏற்றுக் கொண்டவன்.

10. பொ-ரை: நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப் போற்றப் பாவம் தீரும்.

கு-ரை: சமணர்களும் புத்தர்களும் சொல்வனவற்றைக் கொள்ளாத பெரியோர்கள் கோலக்காவைத் தொழப் பாவம் பறையும் என்கின்றது. பெற்றமாசு பிறக்கும் சமணர் - தாங்களாகவே பெற்ற அழுக்குக்களை மறையாது (கழுவாது) வெளிப்படுத்திக் கொள்ளும் சமணர்கள். துவர்தோய் உருவிலாளர் - காவியாடையால் உருவந் தோன்றாதே மறைத்த புத்தர்கள். ஆகிய இருவரும், குற்ற நெறியார் - குற்றப்பட்ட சமயநெறியை உடையவர்கள்.

11. பொ-ரை: இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி