பக்கம் எண் :

460திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


245. நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே. 7

246. எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே. 8

247. நாற்ற மலர்மே லயனு நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

__________________________________________________

7. பொ-ரை: நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கை கூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.

கு-ரை: இது கோலக்காவுளான் பாதம் தொழுவார்க்குத் துயரமில்லை என்கின்றது. குழலார் - குழல்போல. கழலான் மொய்த்த பாதம் - வீரக்கழலோடு செறிந்த சேவடி.

8. பொ-ரை: அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகம நெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

கு-ரை: கோலக்காவைத் தொழுவார் வினை நீங்கும் என்கின்றது. எறியார்கடல் - எறிதலைப் பொருந்துகின்ற கடல். அதாவது கரையொடு மோதுகின்றகடல். முறியார் தடக்கை - முரிதல் அமைந்த தடக்கை என்றது அவனது இருபது தோள்களையும். குறியார் பண் ‘குறிகலந்த இன்னிசை‘ என்பது போலக் கொள்க. நெறியால் தொழுவார் - சிவாகம நெறிப்படியே வணங்குகின்றவர்கள். வினைகள் நீங்கும் என்றது வினைகள் தாமே கழலும் என்பதை விளக்கிற்று.

9. பொ-ரை: மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில்