252. தேனை வென்ற மொழியா
ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன வின்ப மாடும் மடிகளே. 3
253. மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்க ளட்ட பெருமானே. 4
__________________________________________________
கின்றது. இமையோர் - தேவர்கள். எந்தை
என்று - எம்உயிர்த் தந்தையே என்று. அந்திநட்டம்
- சந்தியாதாண்டவம்.
3. பொ-ரை: முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற
சிவபிரான், இனிப்பில் தேனை வென்று
விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய
மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப் பதியினராவார்.
அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர்
ஆவார்.
கு-ரை: இது உமையாளை ஒருபாகம் வைத்து
மானைக் கையேந்திய காழியார் இன்பத்தோடு நடமாடும்
இறைவர் என்கின்றது. தேனைவென்ற மொழியாள் -
வாய்வழிபுகுந்து முன் இனிப்பாய்ப் பின் புளிக்கும்
தேனை, செவிவழியாகச் சிந்தையுள் புகுந்து பின்னும்
இனிக்கும் மொழி வென்றது என்பது குறிப்பு. கான
மான் - சாதியடை, இறைவன் கையில் உள்ளது காட்டுமான்
அன்று. ஆன இன்பம் ஆடும் - முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற.
ஆனநெய் என்பதுபோல்
பசுவினால்வரும் இன்பமாகிய பால் முதலியனவுமாம்.
4. பொ-ரை: தம்மைப் பேணி வழிபடாத
அசுரர்களின் முப்புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத
வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி
வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு
விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப் பதியினர்
ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற்
பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.
கு-ரை: சரந்தொடுத்துப் புரம் அட்ட
பெருமான் காலனை
|