சொல்லல் பாடல் வல்லார்
தமக்கென்றும்
அல்லல் தீரு மவல மடையாவே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
யும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும்.
எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா.
கு-ரை: இது இப்பாடல் பத்தும் வல்லார்க்கு
அல்லல் தீரும் என்கின்றது. நல்லகேள்வி - நல்லகேள்வியால்
விளைந்த அறிவு. அன்றிக் கேள்வி என்பதனைச்
சுருதி என்பதன் மொழிபெயர்ப்பாகக் கொண்டு வேதம்
வல்ல ஞானசம்பந்தன் என்றுமாம். சேடர் - எல்லாம்
தத்தம் காரணத்துள் ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத்
தாம் ஒன்றினும் ஒடுங்காது, ஒடுங்கியவைகள் மீட்டும்
உதிக்க மிச்சமாய் இருப்பவர்;
பெருமையையுடையவர் என்றுமாம். அல்லல் - துன்பம்.
அவலம் - வறுமை.
திருக்கோவலூர்ப் புராணம்
அஞ்ஞானத் துவராடை யமணர்மத
முதலான
இஞ்ஞாலத் திழிசமய விருங்கடலி னிடைப்படா
மெய்ஞ்ஞானத் துறுவிக்கும் வியன்காழிக் கவுணியர்கோன்
தஞ்ஞானச் சரண்தொழுவார் சரணெமக்குச்
சரணாமே.
- மீனாட்சி சுந்தரம்
பிள்ளை.
சிவபுண்ணியத் தெளிவு
பிறையணி மௌலியான் பேதை யாளொடுஞ்
சிறையணி புனற்றடத் தீர மேவியே
நிறையமு தருத்தவுண் ணெகிழப் பாடுநான்
மறையவன் மலர்ப்பதம் வணங்கி வாழ்த்துவாம்.;
- உமாபதி சிவாசாரியார்.
|
|