பெருகி வாழும் பெருமா
னவன்போலும்
பிரமன் மாலு மறியாப் பெரியோனே. 9
281. கூறை போர்க்குந் தொழிலா
ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் றிருப்புத்தூர்
ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. 10
282. நல்ல கேள்வி ஞான
சம்பந்தன்
செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச்
__________________________________________________
மயில்கள் தெருக்கள் தோறும் உலவிக்
களிக்கும் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய்
வாழும் பெருமானாவான்.
கு-ரை: பிரமன் மால் அறியாப்பெருமான்
திருப்புத்தூரில் பெருகி வாழ்கின்றான் என்கின்றது.
மஞ்ஞை - மயில்கள்.
10. பொ-ரை: மேல் ஆடையைப் போர்த்துத்
திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர்
ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய
கொடியினை உடையவராய்த் திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும்,
ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய
அவரைத் தெளிமின்.
கு-ரை: இது இடபக்கொடி கொண்ட இறைவர் நான்கு
வேதத்தினும் ஆறங்கத்தினும் அமர்ந்திருக்கின்றார்
என்கின்றது. கூறை - ஆடை. தேறல் வேண்டா - தெளியவேண்டா.
ஆறும் நான்கும் அமர்ந்தார் - வேத அங்கங்கள் ஆறினையும்
வேதங்கள் நான்கினையும் விரும்பியவர். ஆறுநான்கும்
என்று சொல்லாகக்கொண்டு நிரலே நிறுத்தி, அறுபத்துநான்கு கலை ஞானங்களில் அமர்ந்தார்
எனவுங் கொள்ளலாம் அன்றி ஆறாறாக அடுக்கப்பட்டு
வருகின்ற அகம், அகப்புறம், புறம்,
புறப்புறம் ஆகிய சமயங்களின் பொருளாய் அமர்ந்திருப்பவர்
என்றுமாம்.
11. பொ-ரை: நன்மை தரும் வேதங்களை உணர்ந்த
ஞானசம்பந்தன், செல்வரும் உயர்ந்தவருமான
சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச்
சொல்லிய பத்துப் பாடல்களை
|