278. நெய்த லாம்பல்
கழுநீர் மலர்ந்தெங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாக மகிழ்ந்தா ரவர்போலும்
மையு ணஞ்ச மருவு மிடற்றாரே. 7
279. கருக்க மெல்லாங்
கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல விறைவ ரவர்போலும்
அரக்க னொல்க விரலா லடர்த்தாரே. 8
280. மருவி யெங்கும் வளரும்
மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
__________________________________________________
கு-ரை: வெண்ணிறத்த விரையோடு அலர்
உந்தி - வெண்மையாகிய நிறமுடையவையாய் மணம்
பொருந்திய மலர்களை அடித்துக்கொண்டு, ஒள்நிறத்தஒளியார்
- பேரொளிப் பிழம்பானவர்.
7. பொ-ரை: கருமை பொருந்திய நஞ்சு
மருவும் மிடற்றினராய் இறைவர், நெய்தல், ஆம்பல்
செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து
நிறைந்து விளங்கும் திருப்புத்தூரில் எழுந்தருளிய
உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவார்.
கு-ரை: நீலகண்டராயும் நேரிழைபாகம் மகிழ்ந்தார்
என்கின்றது. மைஉண்நஞ்சம் - கரியவிடம்.
8. பொ-ரை: இராவணனாகிய அரக்கனைக்
கால்விரலால் தளர அடர்த்தவராகிய பெருமானார், மேகங்களிலும்
பரவிக் கமழும் மனமுடைய
பொழில்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றதும், செல்வம்
நிறைந்ததும், செம்மையாளர்
வாழ்வதும், திருவிழாக்கள் பல நிகழ்வதுமாய திருப்புத்தூரில்
எழுந்தருளியிருக்க வல்லவராய இறைவராவார்.
கு-ரை: இராவணனையழித்த இறைவன் திருப்புத்தூரில்
இருப்பவன் என்கின்றது. கருக்கம் - மேகம். அரக்கன் -
இராவணன். ஒல்க - வருந்த.
9. பொ-ரை: பிரமனும் திருமாலும் அறியமுடியாத
பெரியோனாகிய இறைவன், எங்கும் பொருந்தியனவாய் வளரும் இள
|