ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. 4
276. இசைவி ளங்கு மெழில்சூழ்ந்
தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே. 5
277. வெண்ணி றத்த விரையோ
டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 6
__________________________________________________
கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும்
திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை
உடையவர் ஆவார்.
கு-ரை: நாற - மணம்வீச. விண்ட - மலர்ந்த.
வண்டுமலர் கவ்வித் தேறல் திளைக்கும் திருப்புத்தூர்
என்க. ஊறல் வாழ்க்கை - ஊறிப்போன
வாழ்க்கை.
5. பொ-ரை: கங்கையாகிய பெண்
விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர்,
புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும்,
நாற்றிசைகளிலும்
பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், தம்மை
வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும்
பெருமானார் ஆவார்.
கு-ரை: இசை - புகழ். பசை . அன்பு. படித்தார் -
பழகுபவர். வசை - பெண்; ஈண்டு கங்கை. வடி - அழகு. நுதல் -
சென்னி.
"குடுமி களைந்த நுதல்" என்ற புறப்பகுதியும் இப்பொருளதாதல்
ஓர்க.
6. பொ-ரை: வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய
இறைவர்,
வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை
அடித்துக் கொண்டு தெளிந்த தன்மை உடையதாய்த் தண்ணீர்
பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய
ஒளியை உடைய பெருமானார் ஆவார்.
|