பக்கம் எண் :

 26. திருப்புத்தூர்476


ஊனமின்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளு மெயிறும் புனைவாரே. 2

274. பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயி லுறைவா ரவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 3

275. நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்

__________________________________________________

அதனை அடக்கி, அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில் அணிந்தவர், வேனிற் காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி உறையும் பெருமானார் ஆவர்.

கு-ரை: இது இறைவன் பன்றியின் முள்ளையும் பல்லையும் புனைபவர் என்கின்றது. வேனல் - வேனிற்காலம். வண்டு தேன் இவை வண்டின் வகைகள். ஊனம் - குறைபாடு. ஏனம் - ஆதிவராகம். ஆதிவராகம் செருக்குற்று உலகத்தை அழிக்கத் தொடங்கிய காலத்துத் தேவர்கள் வேண்டுகோட்கிரங்கி, அதை அடக்கி, அதனுடைய முள்ளையும், பல்லையும் மார்பில் அணிந்தார் என்பது வரலாறு.

3. பொ-ரை: தம்மை அடைக்கலமாக அடைந்த திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை உடைய இறைவர், நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத் திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர் தல விருட்சம்.

கு-ரை: இது திங்கள் திகழும் சடையார் திருப்புத்தூர் நாதர் என்கின்றது. வரிவண்டு இசைபாட, கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் எனக் கூட்டுக. பாங்கு - பக்கங்களில்.

4. பொ-ரை: ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவர், மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால்