26. திருப்புத்தூர்
பதிக வரலாறு:
பாண்டிநாட்டுப் பதிகள் பலவற்றையும்
வணங்கத் திருவுளங்கொண்ட பிள்ளையார் அணியாப்பனூர்
அணைந்து, பணிந்து பாடியபின் ஏறணிந்த வெல்கொடியார்
வீற்றிருந்தருளும் திருப்புத்தூரையடைந்து சிலநாள்
வீற்றிருந்தார்கள். அப்போது ‘வெங்கள்
விம்மு‘ என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.
பண் : தக்கராகம்
பதிக எண்: 26
திருச்சிற்றம்பலம்
272. வெங்கள் விம்மு வெறியார்
பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையு மிறையாரே. 1
273. வேனல் விம்மு வெறியார்
பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
__________________________________________________
1. பொ-ரை: விரும்பத்தக்க தேன்
விம்மிச் சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள்
வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித்
திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில்
எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய
பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும்
இறைவர் ஆவார்.
கு-ரை: எங்கள் சிரமேல் தங்கிய இறைவன்
திருப்புத்தூர் நாதன் என்கின்றது. வெம்
கள் - விரும்பத்தக்கதேன். வெறி - மணம். கள்ளுண்ட
வெறியால் சோலை தனக்குத் தகாத திங்களோடு
திளைக்கின்றதென்று வேறும் ஒரு பொருள் தோன்ற நின்றது
காண்க. உச்சி - தலை.
2. பொ-ரை: தேவர்களின் வேண்டுகோளை
ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத்
தொடங்கிய காலத்து,
|