271. நறவார் புகலி ஞான
சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: தேன் நிறைந்த
பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய
ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன்
பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்
பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில்
ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.
கு-ரை: செம்பொன்பள்ளியில் மேவிய
இறைவனைப் பெறுதற்காக ஞானசம்பந்தன் சொன்ன பாடல்
பத்தும் சொல்லுவார் ஓங்கி வாழ்வர். நறவு - தேன்.
செறுஆர் - வயல்கள் பொருந்திய உறுமா சொல்ல - உள்ளத்துப்
பொருந்தும்படி சொல்ல.
சூதசங்கிதை
காழிநெடு வரையுதித்துக் கருதரிய
சிவஞானக் கதிர்கள் வீசி
வாழிபரம் பொருட்டுருவ னருட்கயிற்றிற்
பிணிப்புண்டு வளரஞ் ஞானப்
பாழிமிகு பொய்ச்சமணக்
குருட்டிருள்கெட்
டுடைந்தோடப் பாற்றி நீற்றன்
பாழியதா மரைமலர்த்தி விளங்கியநல்
லிளங்கதிரை யகத்துள் வைப்பாம்.
- தேராஜபிள்ளை.
|
|