269. காரார் வண்ணன் கனக
மனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே. 9
270. மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே. 10
__________________________________________________
கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே
அடைந்து வாழ்மின்.
கு-ரை: பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையானான்
தாளை வணங்கி உய்யுங்கள் என்கின்றது. வானார்
திங்கள் - ஒருகலைப்பிறை; வானில் பொருந்தாதாயினும்
பொதுமையின் கூறப்பட்டது.
9. பொ-ரை: நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய
திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக்
காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய
கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம்
இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும்
குற்றங்கள் நீங்கா.
கு-ரை: மலரகிதனான இறைவனைத் தியானியாதவர்களின்
ஊனம் ஒழியா என்கின்றது. கனகம் அனையான் -
பொன் நிறமான பிரமன். ஓராதவர் - மனமுருகித் தியானியாதவர்.
10. பொ-ரை: அழுக்கேறிய உடலினராகிய
சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித்
திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில்
மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள்
பலவும் நில்லா.
கு-ரை: ஈசா என்ன இடர் நில்லா என்கின்றது.
மாசார் உடம்பர் - அழுக்கேறிய உடம்பை உடையவர்கள்.
மண்டை - உண்கலம். பேசா வண்ணம் - பேசக்கூடாதபடி, பேசித்திரிய - வாய்க்கு
வந்தவற்றைப் பேசித்திரிய.
தேசு - ஒளி.
|