பக்கம் எண் :

 25. திருச்செம்பொன்பள்ளி472


267. பையா ரரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே. 7

268. வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே யடைந்து வாழ்மினே. 8

__________________________________________________

கு-ரை: மனத்தை ஒருநெறிக்கண் நிறுத்தும் வன்மையோடு வணங்க வினைநில்லா என்கின்றது.

அறையார் புனல் - பாறைகளைப் பொருந்தி வருகின்ற புனல். சிறை - கரை. கறை - விடம். நிறை - மகளிர்க்குள்ள நிறையென்னுங்குணம்போல மக்களுக்கமைய வேண்டிய இவனலாது இறை இல்லை என்ற உறைப்பு.

7. பொ-ரை: அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.

கு-ரை: மெய்யால் வணங்கினாலும் போதும்; வினைமேவா என்கின்றது. பையார் அரவு - படம் பொருந்திய நாகம். செய் - வயல். மெய்யால் வணங்க - உடம்பால் வணங்க. உண்மையோடு வணங்க என்பாரும் உளர்.

இப்பொருள் ‘நிலையா வணங்க’ ‘நிறையால் வணங்க’ என்றவிடத்தும் போந்தமையின் இறைவனது எளிமைக் குணந்தோன்ற உள்ளம் பொருந்தாது உடம்பால் வணங்கினாலும் போதும்; வினைகள் மேவா. ஆதலால் பொருந்துமாறு ஓர்க.

8. பொ-ரை: வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக்