பக்கம் எண் :

482திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


284. மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னு மடிக ளவர்போலும்
ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே. 2

285. பங்க யங்கண் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையும் மிறையாரே. 3

286. கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்

__________________________________________________

2. பொ-ரை: பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.

கு-ரை: இது முப்பெருந்தேவராய், எல்லாத் தேவராலும் வணங்கப்பெறும் இறைவன் திருப்புன்கூர்நாதன் என்கின்றது. மூவர் ஆய முதல்வர் - திருச்சிவபுரப் பதிகத்துக் குறித்தவண்ணம் பிரமன் மால் உருத்திரன் என்ற முத்தேவராயும், அவர்க்கு முதல்வராயும் உள்ளவர். அடிகள் ஆவர் என்னும் அவர் போலும் எனக்கூட்டுக. ஏ - அம்பு. அல்லார் - பகைவர்.

3. பொ-ரை: எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.

கு-ரை: திருப்புன்கூர் நாதனே எங்கள் முடிமீது உறையும் இறைவன் என்கின்றது. பழனம் - வயல். இவர் கங்கை தங்கும் சடையாராதலின் நீர்வளமிகுந்து பழனங்களில் செங்கயல்கள் திளைக்கின்றன என்பதாம்.

4. பொ-ரை: மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த