பக்கம் எண் :

 27. திருப்புன்கூர்483


உரையி னல்ல பெருமா னவர்போலும்
விரையி னல்ல மலர்ச்சே வடியாரே. 4

287. பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னு மடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே. 5

288. தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற வடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 6

_________________________________________________

மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த் திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.

கு-ரை: இது பெருமான் மணம்நாறும் மலர்ச்சேவடியார் என்கின்றது. கதிர்மாமணி கரையுலாவும், முத்தம் திரை உலாவும் வயல் எனக்கூட்டுக. உரை - புகழ். விரை - மணம்.

5. பொ-ரை: உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.

கு-ரை: இது பவளமேனி யழகரே அனைவராலும் புகழநின்ற பெருமான் என்கின்றது. பரிசு - தன்மை. திகழும்வண்ணம் உறையும் - மிக்கு விளங்கும் வண்ணம் என்றும் உறையும். அழகர் - அழகு பண்பு; அழகர் பண்பி. அம்மையப்பர் ஆதலின் இத்தலத்து அம்மை திருநாமம் சொக்கநாயகி; அழகிய நாயகி. ஆதலால் இவர் அழகர் எனக் குறிப்பிடப்பெற்றார்.

6. பொ-ரை: விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து