289. பாரும் விண்ணும் பரவித்
தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற வடிக ளவர்போலும்
கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே. 7
290. மலைய தனா ருடைய மதின்மூன்றும்
சிலைய தனா வெரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை
மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே. 8
__________________________________________________
நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில்
எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.
கு-ரை: அழகன் சடையில் வெண்பிறை யுடையார்போலும்
என்கின்றது. கழுநீர் வயல்களும், செந்நெல் வயல்களும்
சூழ்ந்த புன்கூர் என்க. பொருந்தி -
தமக்கு இதுவே சிறந்த தலம் என அமைந்து.
7. பொ-ரை: கொடியனவாய்த் தோன்றி
இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த
இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித்
தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும்,
எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான
திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.
கு-ரை: தேர்விழாத்திகழும் திருப்புன்கூர்
அடிகள் முப்புரம் எரித்த முதல்வன்போலும் என்கின்றது.
பார், விண் - ஆகு பெயராக முறையே மக்களையும் தேவரையும்
உணர்த்தின. ஆர - பொருந்த. கூரம் - க்ரூரம்,
கொடுமை.
8. பொ-ரை: வலிமை பொருந்திய இராவணன்
செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின்
அவன் வேண்ட மகிழ்ந்து
அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு
அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின்
முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த்
தலைவர் ஆவார்.
கு-ரை: புரமெரித்த வீரத்தையும், இராவணன்
வலியடக்கியாண்ட கருணையையும்
விளக்குகின்றது. மலையதனார் - மலைதற்
|