பக்கம் எண் :

488திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


295. பாலு நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலு நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 2

296. செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயவெம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 3

297. பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்.

___________________________________________________

விபூதி (திருநீறு). ஒப்பர் ஒப்பர் என்பதற்குத் தமக்குத்தாமே ஒப்பு ஆனவர் என்றும் உரை காண்பர்.

2, பொ-ரை: பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பி யாடிப் புலித்தோலும் முப்புரி நூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற, இள மயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: பாலும் நெய்யும் தயிரும் ஆடி என்றது பஞ்சகவ்யங்களில் தனித்தனியாக இறைவனுக்கு அபிஷேகிக்கத்தக்கன இம் மூன்றுமே எனக் குறித்தபடி. தோல் - புலித்தோல், மான் தோலுமாம். மாலும் - மயக்கும். ஆலும் - ஒலிக்கும்.

3. பொ-ரை: சிவந்த திருமேனியரும், செம்மை நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில் பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும், இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

கு-ரை: வேல் - சூலம். கரிகாடர் - சுடுகாட்டில் நடிப்பவர். ஐயர் - தலைவர். கழலர் - வீரக்கழலையுடையவர்.

4. பொ-ரை: நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல்